தக்காளி சூப்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 11383
மாலை வேளையில் சூப் குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அதிலும் சூப் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் உடல் எடையை குறைக்க நினைப்போர், சூப் குடித்தால் நல்லது. சூப்பில் பல வகைகள் உள்ளன. அதில் தக்காளி சூப் மிகவும் சூப்பராக இருக்கும். மேலும் அதை செய்வதும் மிகவும் ஈஸியானது. சரி, இப்போது அந்த தக்காளி சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4-5
பாசிப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் (நீரில் ஊற வைத்தது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 2 பற்கள் (நசுக்கியது)
சீரகம் - 2 டீஸ்பூன் (வறுத்து பொடி செய்தது)
மிளகுப் பொடி - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய்/ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் தக்காளியை போட்டு 5-10 நிமிடம் வேக வைத்து, பின் குளிர வைத்து, அந்த தக்காளியின் தோலை உரித்துவிட்டு, அதனை பேஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய்/ஆலிவ் ஆயில் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
அடுத்து, வெங்காயம், ஊற வைத்துள்ள பாசிப் பருப்பு, பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, உப்பு, சீரகப் பொடி, மிளகுத் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளற வேண்டும். பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளியை உடனே ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 3 நிமிடம் கொதிக்க வைத்து, இறக்க வேண்டும்.
இப்போது சுவையான தக்காளி சூப் ரெடி!!! இதன்மேல் நறுக்கிய கொத்தமல்லியை தூவி பரிமாற வேண்டும்.