வாழைப்பழ போண்டா
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 11204
பொதுவாக மாலை வேளை வந்தாலே, ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் பஜ்ஜி, வடை, போண்டா என்று டீ அல்லது காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டால், அலாதியான சந்தோஷம் கிடைக்கும். அத்தகைய வகையில் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி, இனிப்பான மற்றும் சத்தான வாழைப்பழத்தை வைத்து போண்டா செய்து கொடுக்கலாம். சரி, இப்போது அந்த வாழைப்பழ போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
வாழைப்பழம் - 2
மைதா மாவு - 1 1/2 கப்
சர்க்கரை - 1/4 கப்
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பௌலில் அந்த மசித்த வாழைப்பழம், மைதா மாவு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து, சற்று கெட்டியாக போண்டா மாவு பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும். பிறகு கலந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது இனிப்பான வாழைப்பழ போண்டா ரெடி!!!