Paristamil Navigation Paristamil advert login

முட்டை போண்டா

முட்டை போண்டா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 11559


 மாலை வேளையில் பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் சூப்பராக இருக்கும். அதிலும் டீ அல்லது காபி குடிக்கும் போது, சூடாக வீட்டிலேயே சத்தான முறையில் பிடித்த காய்கறிகளை வைத்து போண்டா செய்யலாம். இல்லை, அசைவ உணவை விரும்புபவர்கள், முட்டையை வைத்து போண்டா செய்து சாப்பிடலாம். இதனை செய்வது மிகவும் எளிதானது. இப்போது இந்த முட்டை போண்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
முட்டை - 3 (வேக வைத்தது) 
கடலை மாவு - 1 கப் 
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை 
பச்சரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
 உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 
 
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, சூடேற்ற வேண்டும். 
 
எண்ணெயானது காய்ந்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அதேப் போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான முட்டை போண்டா ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்