உருளைக்கிழங்கு தோசை
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 11509
தோசையை காலை வேளையில் மட்டுமின்றி, மாலை வேளையில் செய்து சாப்பிடலாம். அதிலும் தோசைகளில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் உருளைக்கிழங்கு தோசை. இந்த தோசை சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த உருளைக்கிழங்கு தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைக்கிழங்கை கழுவி, தோலுரித்து, துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு போல் கலந்து கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை நன்கு பொடியாக நறுக்கி, மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவ வேண்டும். பின் தவா சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து, தீயை குறைவில் வைத்து முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு தோசை ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
குறிப்பு: இந்த தோசை மொறுமொறுவென்று வருவதற்கு, சாதாரண தோசையை விட நிறைய நேரம் எடுத்துக் கொள்ளும். அதாவது குறைந்தது 4-5 நிமிடம் வேண்டும்.