Facebook Messenger வழியாக தாக்க வரும் வைரஸ்!
26 மார்கழி 2017 செவ்வாய் 12:19 | பார்வைகள் : 8966
உலகில் இருக்கும் பல நாடுகளில் பேஸ்புக் மெசேஞ்சரை டிஜிமைன் கிரிப்டோகரன்சி எனும் வைரஸ் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த வைரஸ் நம்முடைய புகைப்படங்களை வெளியிடுவதில் தொடங்கி மொத்த கணினி செயல்பாட்டையே முடக்கும் அளவிற்கு சக்தி கொண்டது.
தென்கொரியாவில் இருக்கும் டிஜிமைன் என்ற நிறுவனம் தான் இந்த டிஜிமைன் கிரிப்டோகரன்சி என்ற வைரஸை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது.
இந்த வைரஸ் நமக்கே தெரியாமல் பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக நம்முடைய பேஸ்புக்கில் இருந்து மற்றொருவருக்கு பரவும்.
பேஸ்புக் மெசெஞ்சரில் வீடியோ போல வரும் இந்த வைரஸை நாம் திறந்து பார்த்தால் நம் நண்பர்கள் அனைவருக்கும் பரவிவிடும்.
இத்தகைய வைரஸ் இன்னும் சில நாட்களில் இந்தியாவை தாக்க வாய்ப்புள்ளது. இதுவரை வியட்நாம், உக்ரைன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், வெனிசுலா ஆகிய சிறிய நாடுகளை தாக்கியுள்ளது.
ஆனால் இந்த வைரஸ் நம்முடைய மொபைல் மெசேஞ்சர் அப்ளிகேஷனின் மூலம் பரவாது. அதற்கு மாறாக கணினியில் மெசேஞ்சர் பயன்படுத்தும் போது பரவும்.
முக்கியமாக கூகுள் குரோமில் மெசேஞ்சர் பயன்படுத்தினால் இந்த வைரஸ் பரவும்.
இந்த வைரஸ் வந்த பின் முதலில் கூகுள் குரோமில் சில அப்டேட்களை தானாக அதுவே செய்யும். இதனால் நம் மெயில் ஐடியில் இருக்கும் தகவல்கள் வெளியாகும்.
அதன்பின் சில கோப்புகளை தரவிறக்கம் செய்து நம்முடைய கணினியின் செயல்பாட்டை குறைத்து, சில நாட்களில் கணினியை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அளவிற்கு இந்த வைரஸ் செயல்படும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.