Paristamil Navigation Paristamil advert login

புதிய மைல்கல்லை எட்டிய மெசஞ்சர் லைட்!

புதிய மைல்கல்லை எட்டிய மெசஞ்சர் லைட்!

21 மார்கழி 2017 வியாழன் 07:59 | பார்வைகள் : 10894


பேஸ்புக் வலைத்தள சேவையை மொபைல் சாதனங்களில் பயன்படுத்துவதற்கான விசேட அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றமை தெரிந்ததே.
 
அவற்றுள் பிரபல்யமானது பேஸ்புக் மெசஞ்சர் லைட் ஆகும்.
 
இது குறைந்த கோப்பு அளவினைக் கொண்டிருப்பதுடன் குறைந்த இணைய வேகத்திலும் செயற்படக்கூடியது.
 
கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட இந்த அப்பிளிக்கேஷனை இதுவரை 100 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே 50 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்