Paristamil Navigation Paristamil advert login

Facebook அறிமுகம் செய்த 4 புதிய அம்சங்கள்!

Facebook அறிமுகம் செய்த 4 புதிய அம்சங்கள்!

17 மார்கழி 2017 ஞாயிறு 10:36 | பார்வைகள் : 8727


பேஸ்புக் தளத்தில் புதிய ஸ்னூஸ் பட்டன் வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
 
புதிய ஸ்னூஸ் பட்டன் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் விரும்பாதவர்கள், குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கம் அல்லது க்ரூப்களை பின்தொடர்வதை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க முடியும்.
 
இந்த அம்சத்தை செயல்படுத்தியதும், 30 நாட்களுக்கு வாடிக்கையாளர் ஸ்னூஸ் செய்த நபர், பக்கம் அல்லது க்ரூப்களில் பதிவிடப்படும் பதிவுகளை பார்க்க முடியாது. இந்த அம்சம் கொண்டு ஒருவருக்கு பிடிக்காதவர்களை நிரந்தரமாக ஒதுக்கி வைப்பதற்கு மாற்றாக குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பின்தொடராமல் இருக்க செய்ய முடியும்.
 
வாடிக்கையாளர் மற்றவர்களை ஸ்னூஸ் செய்வது குறிப்பிட்ட நபருக்கு ஃபேஸ்புக் தெரியப்படுத்தாது எனிபதோடு குறிப்பிட்ட கால அவகாசம் நிறைவுறும் முன் ஃபேஸ்புக் நோட்டிபிகேஷன் அனுப்பும் என்பதால் மீண்டும் அவரை பின்தொடர்வதை நீட்டிக்க முடியும்.
 
ஏற்கனவே ஃபேஸ்புக் தளத்தில் மற்றவர்களை அன்ஃபாலோ, ஹைடு, ரிப்போர்ட் அல்லது சீ ஃபர்ஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய ஸ்னூஸ் பட்டன் ஃபேஸ்புக் பயன்படுத்துவோருக்கு தங்களது நியூஸ் ஃபீடில் எவற்றை பார்க்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் வசதியை வழங்குகிறது.
 
– ஏதேனும் போஸ்ட்-ஐ மியூட் செய்ய குறிப்பிட்ட போஸ்ட்டின் மெனுவை கிளிக் செய்ய வேண்டும்.
 
– இனி மெனுவில் தெரியும் ஸ்னூஸ் பட்டனை கிளிக் செய்து, 30 நாட்கள் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் வேலை முடிந்தது.
 
ஃபேஸ்புக்கில் ஸ்னூஸ் அம்சம் மட்டுமின்றி பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவதற்கான சோதனை நடைபெற்று வருவதாகவும், வரும் காலங்களில் இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்