ஐபோன்னுடன் போட்டி போடும் Mi நோட் 3!!
12 மார்கழி 2017 செவ்வாய் 07:50 | பார்வைகள் : 9236
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி ஆப்பிள் நிறுவனத்திற்கே போட்டியாக மாறியுள்ளது. சியோமி மலிவு விலை மற்றும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்வதில் பிரபல நிறுவனமாக இருக்கிறது.
டிஎக்சோமார்க் (DxOMark) எனும் பென்ச் மார்க்கிங் தளத்தில் தலைசிறந்த கேமரா வழங்கும் ஸ்மார்ட்போன்கள் அவை வழங்கும் புகைப்பட தரம் கொண்டு மதிப்பீடு செய்து வருகிறது. புகைப்படத்திற்கு ஏற்றவாறு ஸ்மார்ட்போனுக்கு புள்ளிகள் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகியுள்ள புள்ளிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐபோன் 8, கூகுள் பிக்சல் மற்றும் எச்டிசி யு11 உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை விட சியோமியின் Mi நோட் 3 கேமரா அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.
Mi நோட் 3 கேமரா புகைப்படங்களை வழங்குவதில் 94 புள்ளிகளையும், வீடியோக்களில் 82 புள்ளிகளையும் பெற்றிருக்கிறது. ஒட்டுமொத்தமாக Mi நோட் 3 ஸ்மார்ட்போன் கேமரா 90 புள்ளிகளை பெற்றிருக்கிறது.
ஆப்பிள் ஐபோன் 8, கூகுள் பிக்சல் மற்றும் எச்டிசி யு11 போன்ற ஸ்மார்ட்போன்கள் முறையே 93, 90 மற்றும் 90 புள்ளிகளையே பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.