யூடியூப்பில் அறிமுகமாகும் புத்தம் புதிய அட்டகாசமான சேவை!
9 மார்கழி 2017 சனி 06:31 | பார்வைகள் : 8849
வீடியோக்களை பகிரக்கூடிய முன்னணி தளமாக தற்போது வரைக்கும் யூடியூப் விளங்குகின்றது.
இந் நிறுவனம் அடுத்த வருடம் மார்ச் மாதளவில் புதிய சேவை ஒன்றினை வழங்கவுள்ளது.
அதாவது மியூசிக் ஸ்ட்ரீமிங் (Music Streaming) சேவையினை வழங்கவுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் இவ் வருடத்தின் ஜுலை மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
மேலும் யூடியூப் ரெட் மற்றும் கூகுள் பிளே மியூசிக் என்பவற்றினை இணைத்தே இச் சேவை வழங்கப்படவுள்ளது.
இச் சேவைக்கு Remix என பெயரிடப்படும் என தெரிகின்றது.
இப் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட்டால் Spotify மற்றும் Apple Music சேவை என்பவற்றிற்கு பலத்த போட்டியாக இருக்கும் என கருதப்படுகின்றது.
தற்போது Spotify சேவைக்கு 140 மில்லியன் மாதாந்த பயனர்கள் காணப்படுவததுடன் Apple Music சேவைக்கு 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.