12 நிமிடங்களில் Smartphoneகளை முழுமையாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம்!
1 மார்கழி 2017 வெள்ளி 16:18 | பார்வைகள் : 8366
ஸ்மார்ட்ஃபோன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களிலும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போவது அல்லது முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் ஆவது போன்ற பிரச்சினைகள் இன்றும் இருந்து வருகின்றன.
சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட்ஃபோன்களில் வேகமாக சார்ஜ் செய்ய பல்வேறு பெயர்கள் கொண்ட தொழில்நுட்பம் வழங்கப்பட்டு வருகிறது. என்றாலும், இவை பேட்டரியை குறைந்த நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யும் அளவு திறன் கொண்டிருப்பதில்லை.
அந்த வகையில், சாம்சங் அறிமுகம் செய்துள்ள புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்ஃபோன் பேட்டரிகளை 15 நிமிடங்களுக்குள் முழுமையாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் மேற்கொண்டுள்ள புதிய ஆய்வுகளில் ஸ்மார்ட்ஃபோன்களை குறைந்த நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.
தென் கொரிய நிறுவனம் கண்டறிந்துள்ள புதிய வகை பேட்டரி பொருளானது, வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட வேகமாக சார்ஜ் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கண்டறிந்துள்ள புதிய பொருள் கிராஃபைன் பெல் என அழைக்கப்படுகிறது. சாம்சங் இதில் பயன்படுத்தும் பொருள் வழக்கமான லித்தியம் அயன் பேட்டரிகளை விட ஐந்து மடங்கு வேகமாக சார்ஜ் செய்யும்.
தற்போது பயன்படுத்தப்படும் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்ய குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் கிராஃபைன் பெல் முழுமையாக சார்ஜ் செய்ய 12 நிமிடங்களே ஆகும் என சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இதன் திறன் 45 சதவிகிதம் வரை நீடிப்பைப் பெறும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.