Paristamil Navigation Paristamil advert login

Firefox உலாவியில் புதிய வசதி!

Firefox உலாவியில் புதிய வசதி!

27 கார்த்திகை 2017 திங்கள் 15:15 | பார்வைகள் : 8637


தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நிகராக தனிநபர் தகவல்கள் திருடப்படுவதும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
 
இதற்காக ஹேக்கர்கள் அதிக அளவில் போலியான இணையத்தளங்களையே பயன்படுத்துகின்றனர்.
 
இவ்வாறான பிரச்சினையிலிருந்து பயனர்களை பாதுகாக்க Firefox உலாவியில் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 
இதன்படி பயனர்கள் இணையத்தளங்களை பயன்படுத்தும்போது அவற்றில் போலியானதோ அல்லது தகவல்களை திருடக்கூடிய இணையத்தளங்களோ இருந்தால் அது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கும்.
 
குறித்த எச்சரிக்கையின் ஊடாக பயனர்கள் தமது தகவல்கள் திருட்டுப்போவதை தடுக்க முடியும்.
 
இவ் வசதி தொடர்பிலான வேலைத்திட்டங்களை Mozilla நிறுவனம் முழு மூச்சில் முன்னெடுத்துள்ளது.
 
விரைவில் அனைத்து Firefox உலாவிகளிலும் இவ் வசதி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்