சிறுபிள்ளைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ள YouTube!
23 கார்த்திகை 2017 வியாழன் 07:46 | பார்வைகள் : 8715
சிறுபிள்ளைகளுக்காகப் பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகளுக்கான வழிகாட்டிகள் நடைமுறைப்படுத்தப்படுவதை YouTube தீவிரப்படுத்தியுள்ளது.
பெரியவர்களுக்கான கருப்பொருளைக் கொண்ட காணொளிகளைச் சிறு பிள்ளைகள் பார்ப்பதைத் தவிர்க்கும் நடவடிக்கையில் அந்நிறுவனம் சரியாகக் கவனம் செலுத்தவில்லை எனக் குறைகூறல்கள் நிலவுகின்றன.
அதனையடுத்து, YouTube கடந்த வாரம் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் காணொளிப் பதிவேற்ற ஒளிவழிகளை அகற்றியது.
3.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காணொளிகளில் விளம்பரங்களை ஒளிபரப்பும் சேவையும் நிறுத்தப்பட்டது.
பல்லாயிரம் பேர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவதாக YouTube சொன்னது.
அதற்கான வளங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சில வாரங்களுக்கு முன்னர், தகாத முறையில் எடுக்கப்பட்ட சிறார்களுக்கான காணொளிகள் YouTube-இல் பதிவேற்றம் செய்யப்பட்டதை பிரிட்டிஷ் எழுத்தாளர் ஒருவர் சுட்டினார்.
அதனைத் தொடர்ந்து அந்த விவகாரம் தொடர்பில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.