Paristamil Navigation Paristamil advert login

அதிரடி சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ள Samsung Galaxy S9!

அதிரடி சிறப்பம்சங்களுடன் வெளியாகவுள்ள Samsung Galaxy S9!

20 கார்த்திகை 2017 திங்கள் 11:22 | பார்வைகள் : 8438


சாம்சங் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அந்தவகையில் இம்முறை வெளியாகியுள்ள தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
 
சாம்சங் 2018 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் கசிந்துள்ளது. அடுத்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.
 
அதன்படி பென்ச்மார்க்கிங் தளத்தில் SM-G960F சாம்சங் ஸ்மார்ட்போன் பட்டியலிடப்பட்டுள்ளது. தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி S9 என்பதை குறிப்பிடவில்லை என்றாலும், இதன் சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது இது சாம்சங் கேலக்ஸி S9 என்பதையே வெளிப்படுத்துகிறது.
 
கீக்பென்ச் தளத்தின் படி புதிய ஸ்மார்ட்போனில் சிங்கிள்-கோர் 2680 மற்றும் மல்டி-கோர் 7787 புள்ளிகளை பெற்றுள்ளது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் இதுவரை கிடைப்பதில் சக்திவாயந்த ஸ்மார்ட்போனாக இருக்கும். இத்துடன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் எக்சைனோஸ் 9810 ஆக்டாகோர் பிராசஸரும், மற்ற சந்தைகளில் புதிய ஸ்னாப்டிராகன் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் ஸ்னார்டிராகன் 845 சிப்செட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கீக்பென்ச் தளத்தில் அட்டகாசமான புள்ளிகளை பெற்றிருந்தாலும், இது ஐபோன் X அல்லது ஐபோன் 8 சீரிஸ் மாடல்களுக்கு நிகரானதாக இல்லை.
 
ஐபோன் X ஸ்மார்ட்போனில் சிங்கிள்-கோர் 4197 புள்ளிகளையும் மல்டி-கோர் 10,051 புள்ளிகளை பெற்றுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களை வைத்து கேலக்ஸி S9 சார்ந்து தீர்க்கமான முடிவுகளை எட்ட முடியாது. சமீபத்தில் வெளியான தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனில் 3D சென்சிங் கேமரா, ஐபோன் X போன்ற முக அங்கீகார வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்