Paristamil Navigation Paristamil advert login

டுவிட்டர் விதித்த புதிய கட்டுப்பாடு!

டுவிட்டர் விதித்த புதிய கட்டுப்பாடு!

10 கார்த்திகை 2017 வெள்ளி 01:48 | பார்வைகள் : 10998


 சமூக வலைத்தளங்களில் முன்னணி தளங்களில் ஒன்றாக இருக்கும் டுவிட்டர் புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. 

 
அதாவது இனிமேல் பாலியல் தொடர்பான செய்திகள், டுவிட்டுகள், படங்கள் ஆகியவற்றை டுவிட்டரில் தேட முடியாத வகையில் புதிய கட்டுப்பாட்டை அறிமுகம் செய்துள்ளது 
 
செய்தி, சினிமா, விறுவிறுப்பான சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்யப்படும் டுவிட்டரில் ஒருசிலர் பாலியல் சம்பந்தமான குறிப்புகளையும், புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் ஒருசில பாலியல் சம்பந்தமான சொற்களை டுவிட்டரில் தேட தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி இனிமேல் டுவிட்டரில் bisexual, butt, boobs, vagina, clitoris, bisexual, penis போன்ற வார்த்தைகளைப் போட்டு டுவிட்டையோ அல்லது புகைப்படங்களையோ தேட முடியாது. அப்படி தேடினாலும், நீங்கள் தவறான வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்று செய்தி வரும். இருப்பினும் vulva, breast, nipple, whitepride போன்ற வார்த்தைகள் இன்னும் தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்