Paristamil Navigation Paristamil advert login

பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள்: ஆய்வில் வெளியாகிய தகவல்

பேஸ்புக்கில் 27 கோடி போலி கணக்குகள்: ஆய்வில் வெளியாகிய தகவல்

7 கார்த்திகை 2017 செவ்வாய் 10:35 | பார்வைகள் : 8395


பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இதுவரை சுமார் 27 கோடி போலி கணக்குகள் பயன்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
பேஸ்புக் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் பேஸ்புக் தளத்தில் பல போலி மற்றும் நகல் கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இத்துடன் 210 கோடி மாதாந்திர பயனாளிகளில் கிட்டதட்ட இரண்டு அல்லது மூன்று மடங்கு கணக்குகள் தவறான வகைப்படுத்தியோ அல்லது தகுதியற்ற முறையில் இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நிஜ பேஸ்புக் பயனாளிகளில் கிட்டதட்ட 10 சதவிகித கணக்குகள் போலியானவை, இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அளவு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 210 கோடி வாடிக்கையாளர்களில் 13 சதவிகிதம் பேர் அதாவது சுமார் 27 கோடி வாடிக்கையாளர்கள் போலியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எனினும் போலி கணக்குகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ரஷ்ய பிரிவுகளை சேர்ந்தவர்கள் மூலம் பரப்பப்பட்ட தரவுகளை பேஸ்புக் கணித்ததை விட பலமடங்கு அதிகமானோர் பார்த்திருப்பது தெரியவந்துள்ளது.
 
பேஸ்புக் முதலீடுகள் சார்ந்த தகவல்களில் அந்நிறுவனம் போலி செய்திகளை தடுத்து நிறுத்தவும், கடுமையான நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பது போன்றவற்றில் முதலிடூ செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக் வருவாயை எதிர்காலத்தில் அதிகரிக்க முடியும் என பேஸ்புக் தெரிவித்துள்ளது.
 
முன்னதாக பேஸ்புக்கின் வாட்ஸ்அப் செயலி உலகம் முழுக்க செயலிழந்து சில மணி நேர இடைவெளிக்கு பின் மீண்டும் செயல்பட துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்