Paristamil Navigation Paristamil advert login

காது, மூக்கு, தொண்டைக்கு சத்திரசிகிச்சை செய்யும் ரோபா!

காது, மூக்கு, தொண்டைக்கு சத்திரசிகிச்சை செய்யும் ரோபா!

21 ஆவணி 2017 திங்கள் 15:09 | பார்வைகள் : 8630


குடல் இறக்கம், காது, மூக்கு, தொண்டை ஆகியவைக்கு ஆபரேசன் செய்யும் ரோபோவை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
 
ரோபா என்ற எந்திர மனிதனை தற்போது எல்லா துறையிலும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அந்த வகையில் மருத்துவ துறையிலும் ரோபா பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் இங்கிலாந்து விஞ்ஞானிகள் காது, மூக்கு, தொண்டைக்கு அறுவை சிகிச்சை செய்யும் ரோபோவை உருவாகியுள்ளனர்.
 
இந்த ரோபோக்கள் மனித கைகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எவர்சியஸ் என பெயரிட்டுள்ளனர். 
 
இதனை குடல் இறக்கம் சீரமைப்பு, கண், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட அறுவை சிகிச்சை செய்ய பயன்படுத்த முடியும். மேலும் இந்த ரோபோ மூலம் குறைந்த விலையில் ஆயிரக்காணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்