Paristamil Navigation Paristamil advert login

iOS ஜிமெயிலில் அறிமுகமாகியுள்ள புதிய பாதுகாப்பு வசதி!

iOS ஜிமெயிலில் அறிமுகமாகியுள்ள புதிய பாதுகாப்பு வசதி!

15 ஆவணி 2017 செவ்வாய் 10:33 | பார்வைகள் : 8699


ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து ஐஓஎஸ் இயங்குதளத்திலும் Anti-Phishing Security Checks வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் ஜிமெயில் செயலியில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற தளங்களில் நுழைவதை தவிர்க்க முடியும்.
 
இந்த ஆண்டின் துவக்கத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் அறிமுகமான இந்த வசதி தற்போது ஐஓஎஸ் தளத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
ஐபோன் மற்றும் ஐபேட் மூலம் ஜிமெயில் செயலியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது மால்வேர் அடங்கியுள்ள தளங்களில் நுழைய முற்பட்டால் எச்சரிக்கை செய்யும்.
 
இதேபோன்று கணனியில் குரோம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட Safe Browsing அம்சம் இம்முறை ஐஓஎஸ் தளத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்