Paristamil Navigation Paristamil advert login

சில்லி தோசை

சில்லி தோசை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10161


பொதுவாக தோசை என்றாலே குழந்தைகளுக்கு பிடிக்கும். அதிலும் தோசை மொறுமொறுவென்று இருந்தால், அவர்களது வயிற்றில் அதிக அளவில் தோசை செல்லும். இதுவரை குழந்தைகளுக்கு சாதாரணமாகத் தான் தோசை சுட்டுக் கொடுத்திருப்போம். ஆனால் காய்கறி சாப்பிட விருப்பமில்லாத குழந்தைகளுக்கு, தோசையை வைத்தே, வித்தியாசமான முறையில் மசாலா தோசை போன்று சில்லி தோசை செய்து கொடுக்கலாம். 
 
அதிலும் சில்லி தோசையில் குடைமிளகாய் சேர்த்து செய்வதால் தான், இதற்கு சில்லி தோசை என்று பெயர் வந்தது. அதுமட்டுமின்றி இதில் சிறிது பச்சை மிளகாய் சேர்ப்பதால், குழந்தைகளுக்கு ஏற்றவாறு பச்சை மிளகாய் சேர்த்து செய்வது நல்லது. சரி, இப்போது அந்த சில்லி தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 
 
தேவையான பொருட்கள்: 
 
தோசை மாவு - 2 கப் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பச்சை குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
 தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
தோசை மாவுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்.
 
 அடுத்து, நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து 1 நிமிடம் கிளறி, அதனை தோசை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
 
 பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தேய்த்து, கலந்து வைத்துள்ள தோசை மாவை வைத்து, தோசை ஊற்றி, எண்ணெய் சேர்த்து, மொறுமொறுவென்று சுட்டு, குழந்தைகளுக்கு பரிமாறவும். இப்போது சுவையான சில்லி தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்