முட்டைகோஸ் கட்லெட்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9589
மாலை வேளையில் ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்ய ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசிபி உள்ளது. கட்லெட்டில் நிறைய வகைகள் உள்ளன. ஆனால் முட்டைகோஸ் கட்லெட்டை கேள்விபட்டிருக்கிறீர்களா? இல்லையெனில், அந்த முட்டைகோஸ் கட்லெட்டை செய்து பாருங்கள். உங்களுக்காக, முட்டைகோஸ் கட்லெட்டை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறையில் கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து பாருங்களேன்...
தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ் - 1 கப் (நறுக்கியது)
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்
பிரட் தூள் - 1/2 கப்
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கொள்ள வேண்டும்.
பின்பு அதனை சிறு சிறு உருண்டைகளாக்கி, கட்லெட் போன்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு பௌலில் மைதாவை போட்டு, 1/2 கப் நீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
பின் தட்டி வைத்துள்ள கலவையை, மைதா மாவில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த கட்லெட் துண்டுகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இதேப் போன்று அனைத்தையும் பொரித்து எடுக்கவும். இப்போது சுவையான முட்டைகோஸ் கட்லெட் ரெடி!!!