Paristamil Navigation Paristamil advert login

காரமான அடை தோசை

காரமான அடை தோசை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9468


 தென்னிந்தியாவில் தோசை மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி. அதிலும் தோசையில் ஒன்றான அடை தோசை தமிழ் நாட்டில மிகவும் பிரபலமான ஒன்று. இந்த தோசையின் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில பருப்புக்களை, அரிசியுடன் சேர்த்து அரைத்து, தோசைகளாக விடுவது தான். மேலும் அடை தோசை மிகவும் காரமான ஒரு ரெசிபி. அந்த அடை தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

 
தேவையான பொருட்கள்: 
 
ரவை - 1/2 கப் 
இட்லி அரிசி - 1/2 கப் 
கொண்டைக்கடலை - 1/2 கப் 
துவரம் பருப்பு - 1/3 கப் 
உளுத்தம் பருப்பு - 1/4 கப் 
துருவிய தேங்காய் - 1/3 கப் 
வரமிளகாய் - 3-4 
கறிவேப்பிலை - சிறிது 
சீரகம் - 1 டீஸ்பூன் 
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் 
கொத்தமல்லி - 2 
டேபிள் ஸ்பூன் (நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 1/2 கப்
 
செய்முறை: 
 
முதலில் இட்லி அரிசியை இரவில் படுக்கும் முன், நீரில் ஊற வைத்து விட வேண்டும். அதேப் போல் உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கொண்டைக்கடலை போன்றவற்றையும் நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின் காலையில் எழுந்து ஊற வைத்துள்ள அனைத்து பருப்புக்களையும் நன்கு நைஸாக அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும் பிறகு கிரைண்டரில் ஊற வைத்துள்ள அரிசியை கழுவிப் போட்டு, வரமிளகாய், துருவிய தேங்காய், சீரகம், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 
பின்பு அரைத்து வைத்துள்ள பருப்புடன், இந்த தோசை மாவை போட்டு, தேவையான உப்பு சேர்த்து கலந்து, நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை தூவி கிளறி, 25 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஊற வைத்துள்ள மாவை, தோசைப் போல் ஊற்றி, எண்ணெய் சேர்த்து இருபக்கமும் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும். 
 
இப்போது சுவையான மற்றும் காரமான அடை தோசை ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்