காபனீரொட்சைட்டை எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு
1 ஆவணி 2016 திங்கள் 20:55 | பார்வைகள் : 8700
காபனீரொட்சைட்டானது தகனத்திற்கு ஒரு போதும் துணை புரியாது எனவும், மாறாக தகனத்தை நிறுத்துவதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்றுமே அறிந்திருப்பீர்கள்.
ஆனால் இந்த நியதியை மாற்றி காபனீரொட்சைட்டு வாயுவினை எரிபொருளாக மாற்றக் கூடிய தொழில்நுட்பம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது இத் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படும் சோலர் கலங்கள் காபனீரொட்சைட்டு வாயுவை அகத்துறுஞ்சி செயற்கை முறை ஒளித்தொகுப்பிற்கு உட்படுத்துகின்றது.
இதன் விளைவாக Syngas எனப்படும் வாயு நிலை எரிபொருள் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் Syngas ஆனது அதிக வினைத்திறன் உடையதாக காணப்படுகின்றது.
இதனை சிக்காக்கோ பல்கலைக்கழகத்தினை சேர்ந்த விஞ்ஞானிகளே உருவாக்கியுள்ளனர். எனினும் இத் தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தல் கட்டத்திலேயே காணப்படுகின்றது.
எவ்வாறெனினும் இத் தொழில்நுட்பம் வெற்றியளிக்கும் பட்சத்தில் பூமியானது காபனீரொட்சைட் வாயுவினால் மாசடைவது தவிர்க்கப்படும் என்பது மட்டும் உறுதி.