Samsung Galaxy S5 கைபேசி அறிமுகம்!
5 பங்குனி 2014 புதன் 07:10 | பார்வைகள் : 10389
கைப்பேசி பிரியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Samsung Galaxy S5 தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இக்கைப்பேசியானது இதுவரை அறிமுகமான கைப்பேசிகள் கொண்டிராத புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளது.
அதாவது 2.5GHz Quad-Core Processor, 2GB RAM என்பனவற்றுடன் 16 மற்றும் 32GB சேமிப்பு நினைவகங்களைக் கொண்ட இரு பதிப்புக்களாக வெளிவருகின்றது.
இவை தவிர 5.1 அங்குல அளவுடைய பெரிய திரை, 1920 x 1080 Pixel Resolution கொண்டதாக காணப்படுகின்றது.
மேலும் 16 மெகாபிக்சல்களை உடைய வினைத்திறன் கூடிய பிரதான கமெரா, 2.1 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
Android 4.4.2 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 142.0 x 72.5 x 8.1mm அளவிடையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் 145g நிறையை உடையதாக காணப்படுகின்றது.
அத்துடன் வெள்ளை, கறுப்பு, நீலம், தங்க நிறங்களில் இக்கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.