கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்க்கும் அப்பிள்
4 பங்குனி 2014 செவ்வாய் 06:59 | பார்வைகள் : 10264
ஸ்மார்ட்-போன் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் அப்பிள் நிறுவனம், உலகின் முன்னணி கார் தயாரிப்புக் கம்பனிகளுடன் கைகோர்த்துள்ளது.
கார்களை செலுத்தும் சமயத்தில் ஸ்மார்ட்போன்களை கையாளக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை (CarPlay) அறிமுகம் செய்வது அப்பிள் நிறுவனத்தின் நோக்கமாகும்.
இதன் பிரகாரம், குறித்த கார்களில் பயணம் செய்கையில் அப்பிள் ஐபோனை பயன்படுத்தும் சாரதிகளுக்கு பல்வகைத் தெரிவுகள் வழங்கப்படுகின்றன.
காரை சரியான பாதையில் செலுத்தக்கூடிய வரைபடம் போனின் திரையில் தெரியும்.
போனில் ஏதேனும் குறுந்தகவல்கள் வரும் பட்சத்தில், அதனை குரல் வடிவில் ஒலிக்கச் செய்யும் வசதியும், குரல் வழியாக பதில் அளிக்கையில் பதிலை எழுத்து வடிவில் மாற்றி அனுப்பும் வசதியும் புதிய தொழில்நுட்பத்தில் உள்ளடங்குகின்றன.