பருப்பு சாதம்
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10187
செல்லும் குழந்தைகளுக்கு உடலுக்கு சத்தாக இருக்கும் வகையில், காலையில் விரைவில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், புரோட்டீன் அதிகம் இருக்கக்கூடிய பருப்பை வைத்து ஒரு சாதம் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இந்த சாதம் பருப்பு சாதத்தை காலை வேளையில் செய்வது என்பது மிகவும் ஈஸி. அப்படிப்பட்ட அருமையான பருப்பு சாதத்தை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள் :
பாசி பருப்பு - 1 கப்
அரிசி - 2 கப்
வெங்காயம் - 2 ]
தக்காளி - 2
வர மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
முதலில் அரிசி மற்றும் பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு அரை மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி கொள்ளவும்.
பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், சீரகம், வர மிளகாய் சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு வதக்கவும்.
நன்கு வதங்கியதும், அதில் தண்ணீரை விட்டு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும், அதில் ஊற வைத்த அரிசி மற்றும் பருப்பை கழுவி குக்கரில் போட்டு, உப்பை சரி பார்த்து மூடி போட்டு, 3 விசில் வந்ததும் இறக்கி விடவும்.
பின் அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறலாம். இப்போது அருமையான பருப்பு சாதம் ரெடி!!! இதனை நெய் விட்டு, ஊறுகாயுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.