Paristamil Navigation Paristamil advert login

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 6வது உடற்பாகங்கள் மீட்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் 6வது உடற்பாகங்கள் மீட்பு

13 புரட்டாசி 2023 புதன் 04:29 | பார்வைகள் : 4608


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவுள்ளன.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆறாவது நாளாக நேற்று (12) இடம்பெற்றன.

குறித்த அகழ்வாய்வின் போது ஏழு மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதோடு ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் நேற்றும் ஆறாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் இடம்பெற்றிருந்தன.

அதன்படி, முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா,

" இன்றையதினம் ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டன.

ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த பகுதியில் துப்பாக்கி சின்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக மீட்கப்பட்டன.

அகழ்வு பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படும் நிலையில் ஒன்றின் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னி பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருக்கலாம்." என தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் அகழ்வு பணிகள் தொடர்ந்து இன்றைகய தினமும் ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்