வாழைப்பழ ஸ்மூத்தி ரெசிபி
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9830
தற்போது டயட்டில் உள்ளோரின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், எப்போதும் காலையில் ஒரே ஓட்ஸை சமைத்து சாப்பிட பிடிக்காது. ஆகவே அத்தகையவர்கள் ஓட்ஸிற்கு இணையான சத்துக்களைக் கொண்டிருக்கும் வாழைப்பழ ஸ்மூத்தியை செய்து காலையில் சாப்பிட்டால், அது நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட தேவையான சத்துக்களைக் கொடுக்கும். இப்போது டயட் மேற்கொள்வோர் வாழைப்பழ ஸ்மூத்தியை எப்படி செய்து சாப்பிட வேண்டுமென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
தயிர் - 400 மி.லி
வாழைப்பழம் - 2
தேன் - 3 டீஸ்பூன்
பூசணி விதை - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 10 மி.லி
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தின் தோலை உரித்துவிட்டு, அதனை பிளெண்டரில் போட்டு, தயிர், 2 டீஸ்பூன் தேன், 2 டீஸ்பூன் பூசணி விதை மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை டம்ளரில் ஊற்றி, அதன் மேல் மீதமுள்ள பூசணி விதைகள் மற்றும் தேன் ஊற்றி அலங்கரித்தால், சுவையான வாழைப்பழ ஸ்மூத்தி ரெடி!!!