நல்லுார்த் திருவிழாவில் சாரணத் தொண்டன் மீது பொலிஸார் தாக்குதல்
13 புரட்டாசி 2023 புதன் 11:41 | பார்வைகள் : 5538
யாழ் மாநகரசபை வாசலின் முன் கடமையிலிருந்து சாரணத் தொண்டனுக்கு காதைப் பொத்தி பொலிஸார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நல்லுார்த் திருவிழாவின் போது எந்தவித சம்பளமோ அல்லது எதிர்பார்ப்போ இல்லாது மிகவும் கடமை உணர்வுடன் சாரணத் தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றினர்.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் யாழ் மாநகரசபைக்கு முன் உள்ள வாகனத்தடைப் பகுதியில் கடமையாற்றிய சாரணத் தொண்டன் ஒருவர் மீது அங்கு நின்ற பொலிசார் கதைப் பொத்தி அடித்து வீழ்த்தியுள்ளார்.
குறித்த தொண்டன் அடிவாங்கியவுடன் கீழே விழுந்து கிடந்ததாக அங்கு நின்ற பக்தர்கள் கூறுகின்றார்கள். நடக்க இயலாமல் நின்ற ஒரு வயோதிப மாதுவை நல்லுார் முன் பந்தல் வரை கொண்டு சென்று விட்ட காரணத்தாலேயே பொலிசார் குறித்த தொண்டன் மீது தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது.
தாங்கள் கூறிய இடத்தில் நிற்காது தங்களின் சொல்லுக்கு கட்டுப்படாது செயற்பட்டதாக கூறியே தொண்டன் மீது பொலிஸ் தாக்குதல் மேற்கொண்டதாகத் அங்கு நின்றவர்கள் கூறுகின்றார்கள்.
பொலிசாரின் இச் சம்பவம் பக்தர்களிடையே கடும் விசனத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.