கஞ்சாப் பாவனையில் பிரான்ஸ் ஐரோப்பிய நாடுகளில் முதலிடம். நாடாளுமன்ற உறுப்பினர் Renaud COLSON
13 புரட்டாசி 2023 புதன் 12:21 | பார்வைகள் : 13571
கஞ்சா என்னும் போதைப்பொருள் உலகில் அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பிரான்சில் வாழும் மக்களில் 45% சதவீதத்தினர் வாழ்க்கையில் ஒருமுறையேனும் தாங்கள் கஞ்சாவை பாவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ஸ்பெயின் நாட்டில் வாழ்பவர்கள் 38% சதவீதத்தினரும், இத்தாயில் வாழ்பவர்கள் 33% சதவீதத்தினரும், ஏனைய ஐரோப்பிய நாடுகளில் வாழ்பவர்கள் 27% சதவீதத்தினரும் தாங்கள் வாழ்நாளில் ஒருமுறையேனும் கஞ்சாவைப் பாவித்துளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்து கணிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் Renaud COLSON "பிரான்சில் கஞ்சா வைத்திருப்பது தண்டனைக்கு உரிய குற்றம், ஓராண்டு சிறை என்பது 2020ல் கொண்டுவரப்பட்டது. ஒஸ்ரியாவில் ஆறுமாதங்கள், ஜெர்மனியில் ஐந்து வருடங்கள் என்னும் நிலையுள்ளது. ஆனால் பிரான்சில் சட்டம் இருக்கிறதே தவிர அது நடைமுறையில் இல்லை" என தெரிவித்த அவர்.
"இந்த போதைப்பொருள் வர்த்தகத்தினால் இன்று பல நூற்றுக்கணக்கான அசம்பாவிதங்களும், பல நூறுக்கும் அதிகமான கொலைகளும் நாட்டில் நடைபெறுகிறது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

























Bons Plans
Annuaire
Scan