Covid-19 நோய்த்தொற்று பிரான்சில் மீண்டும் அதிகரித்து உள்ளது. பிரான்ஸ் சுகாதார அமைச்சு.

16 புரட்டாசி 2023 சனி 07:21 | பார்வைகள் : 10582
அண்மைக்காலமாக COVID-19 நோய்த்தொற்றின் புதிய BA.2.86 என்ற புதிய மாறுபாட்டின் நோய்த்தொற்றே பரவலாக அதிகரித்து வருவதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த புதிய வகை நோய்த்தொற்று வேகமாகப் பரவக்கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வரும் Octobre 17ம் திகதி ஆரம்பிக்க இருந்த COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிரான பிரச்சாரத்தை தாம் Octobre 2ம் திகதிக்கு முன் நகர்த்தியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக வயோதிப இல்லங்களில் இருப்பவர்கள், அங்கு பணியாற்றுபவர்கள், மற்றும் மருத்துவமனையில் இருப்பவர்கள், பழைய நோய்வாய் பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது என தெரிவிக்கும் பிரான்ஸ் சுகாதார அமைச்சு, புதிய மாறுபட்ட வைரசுக்கு எதிரான தடுப்பூசிகள் 15,5 மில்லியன் கையிருப்பில் உள்ளதால் மற்றையவர்களும் ஏற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது.