Paristamil Navigation Paristamil advert login

வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபி

வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9634


 குளிர்காலத்தில் கீரைகள் அதிகம் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள். ஆகவே அந்த கீரையில் ஒன்றான வெந்தயக்கீரையை உருளைக்கிழங்குடன் சேர்த்து ஒரு ரெசிபி செய்து சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட்டால், மிகவும் அருமையாக இருக்கும். இங்கு அந்த வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இது நிச்சயம் வித்தியாசமான சுவையைக் கொடுப்பதோடு, ஆரோக்கியமானதாகவும் இருக்கும். 

 
தேவையான பொருட்கள்: 
 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பூண்டு - 10 பற்கள் (நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக கீறியது) 
பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ 
வெந்தயக் கீரை - 250 கிராம் (நன்கு கழுவி நறுக்கியது) 
மல்லி தூள் - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
 மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை:
 
முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்கி, தோலை உரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்து மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும். 
 
பின்பு வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் வெந்தயக்கீரையை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 8-10 நிமிடம் கீரை நன்கு வேகும் வரை அடுப்பில் வைத்து, வாணலியில் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒன்று சேரும் வரை கிளறி இறக்கினால், சுவையான வெந்தயக்கீரை உருளைக்கிழங்கு ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்