Paristamil Navigation Paristamil advert login

துவரம் பருப்பு துவையல்

துவரம் பருப்பு துவையல்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9341


 குளிர்காலத்தில் பெரும்பாலானோர் காய்ச்சல், சளி போன்றவற்றால் அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்களுக்கு எதுவுமே சாப்பிட பிடிக்காது. ஆகவே அப்போது நிறைய வீட்டில் சுடு கஞ்சி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் இது சாப்பிட்டால், கொஞ்சம் நன்றாக இருக்கும் என்பதால் தான். அப்படி சுடு கஞ்சி செய்து கொடுக்கும் போது, அத்துடன் தொட்டுக் கொள்வதற்கு துவையல் என்றால் சூப்பராக இருக்கும். அப்படி சுடு கஞ்சிக்கு சைடு டிஷ்ஷாக அருமையான துவரம் பருப்பு துவையலை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள். 

 
தேவையான பொருட்கள்: 
 
துவரம் பருப்பு - 1/2 கப் 
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் 
வரமிளகாய் - 2-3 
பூண்டு - 2 பற்கள் உப்பு - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பருப்பானது நன்கு குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், பூண்டு, தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மென்மையாக அரைக்காமல், ஓரளவு அரைத்து இறக்கினால், சுவையான துவரம் பருப்பு துவையல் ரெடி!!! இதனை சுடு கஞ்சி மற்றும் ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்