Paristamil Navigation Paristamil advert login

இத்தாலிய தீவில் உள்ள அகதிகள் பிரான்சுக்குள் நுழைய அனுமதி இல்லை - உள்துற அமைச்சர் அறிவிப்பு

இத்தாலிய தீவில் உள்ள அகதிகள் பிரான்சுக்குள் நுழைய அனுமதி இல்லை - உள்துற அமைச்சர் அறிவிப்பு

20 புரட்டாசி 2023 புதன் 07:00 | பார்வைகள் : 5167


இத்தாலியின் தீவு ஒன்றில் உள்ள அகதிகள் பிரான்சுக்குள் நுழைய அனுமதி இல்லை என பிரான்சின் உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

இத்தாலிக்குச் சொந்தமான Lampedusa எனும் சிறிய தீவில் அண்மியில் 8,500 இற்கும் மேற்பட்ட அகதிகள் திடீரென வந்திறங்கியிருந்தனர். அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவது அவர்களது நோக்கமாகும். இந்நிலையில், அவர்கள் பிரான்சுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்  Gérald Darmanin நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

அதேவேளை, குறித்த அகதிகள் தங்களது நாடுகளுக்குச் திருப்பி அனுப்ப அவசியமான ஒத்துழைப்பை இத்தாலிக்கு வழங்குவோம் எனவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

துனிசியா மற்றும் சிசிலி ஆகிய நாடுகளுக்கு இடையே இருக்கும் இந்த தீவுக்கு அண்மையில் ஒரே நாளில் 196 படகுகளில் 8,500 வரையான அகதிகள் வந்திறங்கினர். ஐவரி கோஸ்ட் மற்றும் செனேகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகளே அங்கு நுழைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்