கோதுமை ராகி புட்டு
2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9530
காலையில் இட்லி, தோசை என்று செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் புட்டு செய்து சாப்பிடுங்கள். அதிலும் டயட்டில் இருப்போர் கோதுமை மற்றும் கேழ்வரகு என்னும் ராகியைக் கொண்டு புட்டு செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இங்கு அந்த கோதுமை ராகி புட்டுவை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலை வேளையில் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை - 1 கப்
கேழ்வரகு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேழ்வரகு, கோதுமை ஆகியவற்றை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து, சிறிது நேரம் வறுக்க வேண்டும். பின்னர் அதனை இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு மாவு போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்து வைத்துள்ள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டி, இட்லி தட்டில் வைக்க வேண்டும்.
பிறகு அதனை இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து இறக்கினால், கோதுமை கேழ்வரகு புட்டு ரெடி!!! இந்த புட்டுடன் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.