Paristamil Navigation Paristamil advert login

பாசிப்பருப்பு வடை

பாசிப்பருப்பு வடை

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9432


 பொதுவாக கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு கொண்டு தான் வடை செய்வார்கள். ஆனால் பாசிப்பருப்பு கொண்டும் வடை செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், பாசிப்பருப்பைக் கொண்டு கூட அருமையான சுவையில் வடை செய்யலாம். இந்த வடை செய்வது மிகவும் ஈஸி. மாலை வேளையில் செய்து டீயுடன் சாப்பிட்டால் டக்கராக இருக்கும். சரி, இப்போது அந்த பாசிப்பருப்பு வடையை எப்படி செய்வதென்று பார்ப்போம். 

 
தேவையான பொருட்கள்: 
 
பாசிப்பருப்பு - 1 கப் 
அரிசி மாவு - 1/2 கப் 
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) 
வரமிளகாய் - 5 
இஞ்சி - 1/2 இன்ச் 
பூண்டு - 5 பல் 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு) 
 
செய்முறை: 
 
முதலில் பாசிப்பருப்பை நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் வரமிளகாய், இஞ்சி, பூண்டு, சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் அரிசி மாவு, உப்பு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பிசைந்துள்ள மாவை வடைகளாக தட்டிப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு வடை ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்