Paristamil Navigation Paristamil advert login

வல்லாரைக் கீரை சட்னி

வல்லாரைக் கீரை சட்னி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9853


ஞாபக சக்தியை அதிகரிக்கும் ஒரு கீரை தான் வல்லாரை கீரை. இந்த கீரையை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்களின் ஞாபக சக்தியானது அதிகரிப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். சில குழந்தைகள் கீரைகளை சாப்பிட மறுப்பார்கள். அத்தகைய குழந்தைகளுக்கு கீரையை சட்னி போன்று செய்து கொடுத்தால், நிச்சயம் சாப்பிடுவார்கள். இங்கு வல்லாரைக் கீரையைக் கொண்டு எப்படி சட்னி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அதனை குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்.


தேவையான பொருட்கள்:

வல்லாரைக் கீரை - 1 கட்டு (சுத்தம் செய்து, நீரில் அலசியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வர மிளகாய் - 3
பூண்டு - 5 பற்கள்
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
புளி - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வறுக்க வேண்டும்.


பின்னர் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.


பின்பு புளி மற்றும் துருவிய தேங்காயை போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்கி, குளிர வைக்க வேண்டும். பிறகு அந்த பொருட்களை மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும்.


பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, பௌலில் ஊற்றினால், சத்தான வல்லாரைக் கீரை சட்னி ரெடி!!!

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்