Paristamil Navigation Paristamil advert login

சிக்கன் வெங்காய பக்கோடா

சிக்கன் வெங்காய பக்கோடா

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9638


 மாலை வேளையில் டீ அல்லது காபி குடிக்கும் போது, அத்துடன் நன்கு மொறுமொறுவென்று செய்து சாப்பிட நினைத்தால், சிக்கன் வெங்காய பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!\ 

 
தேவையான பொருட்கள்: 
 
எலும்பில்லாத சிக்கன் - 200 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது) 
வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது) 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது) 
கடலை மாவு - 1 கப் 
கபாப் மசாலா - 1 டீஸ்பூன் 
சோம்பு - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 3 கப் 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, உப்பு, கபாப் மசாலா மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
 
பின்னர் அதில் பச்சை மிளகாய், சோம்பு மற்றும் கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும் பின்பு அதில் சிக்கன் துண்டுகள் மற்றும் வெங்காயத்தை சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும். 
 
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து எண்ணெயில் உதித்து விட்டு, தீயில் குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சிக்கன் வெங்காய பக்கோடா ரெடி!!!
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்