Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் முதலையின் வாயில்  பெண்ணின் சடலம்

அமெரிக்காவில் முதலையின் வாயில்  பெண்ணின் சடலம்

26 புரட்டாசி 2023 செவ்வாய் 08:12 | பார்வைகள் : 8012


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் முதலையின் வாயில்  பெண் ஒருவர் சடலம் காணப்பட்டுள்ளது.

பின்னெலஸ் கவுன்டி என்னும் இடத்தில் உள்ள கால்வாய்க்குள் இருந்த முதலை ஒன்று பெண் ஒருவரை தனது தாடையில் வைத்து இருப்பதை கண்ட பொதுமக்கள் வனத்துறையினருக்கு புகார் அளித்தனர்.

தகவலை அடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் பொலிசார் அந்த முதலையை கருணை அடிப்படையில் கொன்று பின்னர் பெண்ணின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

முதலை இறந்த பின்னர் தாடையில் இருந்த பெண் சடலத்துடன் வனத்துறையினர் மீட்டு சென்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்