இலங்கையில் சாதாரண தர பரீட்சை பிற்போடப்படும்: கல்வி அமைச்சர் தெரிவிப்பு
23 புரட்டாசி 2023 சனி 16:17 | பார்வைகள் : 3366
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோகத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார்.
ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டி ஏற்படும் எனவும் அதனை உத்தியோகபூர்வமாக ஆணையாளர் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.
COVID பெருந்தொற்றுக்கு பின்னர் உருவான நெருக்கடியினால் இரண்டு வருடத்திற்கு அதிகக் காலம் கல்வி செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பதால், அது பரீட்சையில் தாக்கம் செலுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.