மலேசியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்

23 புரட்டாசி 2023 சனி 17:51 | பார்வைகள் : 7360
மலேசியாவில் இலங்கை குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மூன்று பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த தம்பதியை கைது செய்துள்ளதாக கோலாலம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் உயிரிழந்த ஒருவரின் தாய், தந்தை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோலாலம்பூரில் Sentul கீழ் கோவில் கிராமத்தில் Perhentian வீதியில் உள்ள கடையில் வைத்து இந்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் இருவர் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் என்றும் மற்றவரின் உரிமையாளர்களின் மகன் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.