அமெரிக்க மக்களை அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள்- அமெரிக்க அதிபர்
24 புரட்டாசி 2023 ஞாயிறு 09:34 | பார்வைகள் : 4394
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது.
வெள்ளை மாளிகையின் உத்தியோகப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர், இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார்.
மேற்படி அறிக்கையில் "குளிர்காலம் மற்றும் சளி, காய்ச்சல் காலம் ஆரம்பமாகவுள்ளது.
அதிபர் அனைத்து அமெரிக்கர்களையும் தன்னை உதாரணமாக எடுத்துக் கொண்டு, பொது மக்கள் அவர்களது மருத்துவரை தொடர்பு கொண்டு தடுப்பு மருந்தை செலுத்திக் கொள்ள அறிவுறுத்தி இருக்கிறார்," என்று மருத்துவர் கெவின் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் இம்மாத ஆரம்பத்தில், புதிய வகை கொரோனா தடுப்பூசியை ஆறு மாத குழந்தைகள் ஆரம்பமாகி அனைவரும் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தது.
கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்து இருக்கலாம்.
ஆனால் அமெரிக்காவில் இன்றும் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கும் நிலை உள்ளது.
ஏற்கனவே செலுத்தப்பட்ட தடுப்பூசியின் தீவிரம், பலருக்கும் குறைந்து வருவதாக மருத்துவ வல்லுனர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
இதன் காரணமாக புதிய தடுப்பு மருந்து பலரின் உயிரை காக்கும் என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் தான் ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவருக்கு தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்தது.