Paristamil Navigation Paristamil advert login

பாதாம் லட்டு

பாதாம் லட்டு

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9432


 நட்ஸில் ஒன்றான பாதாமை சாப்பிட விரும்பாத குழந்தைகளை பாதாம் சாப்பிட வைக்க ஒரு சிறந்த வழி என்றால், அது பாதாமைக் கொண்டு லட்டு செய்து கொடுப்பது தான். பாதாம் லட்டுவானது அதிக கலோரிகளை கொண்டிருந்தாலும், குழந்தைகளுக்கு அவ்வப்போது கொடுப்பது சிறந்தது. ஏனெனில் பாதாமில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே கவலையின்றி குழந்தைகளுக்கு வாரத்திற்கு 2 முறை கொடுப்பது நல்லது. சரி, இப்போது அந்த பாதாம் லட்டுவை எப்படி செய்வதென்று பார்ப்போமா! 


தேவையான பொருட்கள்: 
 
பாதாம் - 200 கிராம் 
சர்க்கரை - 50 கிராம் 
ஏலக்காய் - 4 (பொடி செய்து கொள்ளவும்) 
நெய் - 100 கிராம் 
பாதாம் - சிறிது (நறுக்கியது) 
 
செய்முறை: 
 
முதலில் பாதாமை நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் அதன் தோலை நீக்கிவிட்டு, அதனை லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த பாதாம் சேர்த்து 6-7 நிமிடம் வறுக்க வேண்டும். பின் அதில் சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி, பின் இறக்கி குளிர வைக்க வேண்டும். 
 
கலவையானது வெதுவெதுப்பான நிலையில் இருக்கும் போது, அதனை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சிறிது நறுக்கிய பாதாமை வைத்து அலங்கரித்தால், பாதாம் லட்டு ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்