Paristamil Navigation Paristamil advert login

வெண் பொங்கல்

வெண் பொங்கல்

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 9280


 தமிழ் நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு காலை உணவு தான் வெண் பொங்கல். இந்த பொங்கலை பலவாறு சமைப்பார்கள். இங்கு அவற்றில் மிகவும் ஈஸியான ஒரு செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் காலையில் அலுவலகத்திற்கு செல்வோர் இதை சமைத்து எடுத்துச் செல்லாம். பேச்சுலர்கள் கூட இந்த வெண் பொங்கலை முயற்சி செய்யலாம். சரி, இப்போது அந்த வெண் பொங்கல் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! 

 
தேவையான பொருட்கள்: 
 
பச்சரிசி - 1 கப் 
பாசிப்பருப்பு - 1/2 கப் 
தண்ணீர் - 5 கப் 
இஞ்சி - 1 இன்ச் 
மிளகு - 1 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
எண்ணெய் - 1/4 கப் 
நெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன் 
உப்பு - தேவையான  
முந்திரி - 5-7 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
பின்னர் அதனை நன்கு கழுவி, குக்கரில் ஒன்றாக சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, 3-4 விசில் விட்டு இறக்கி, லேசாக மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 
 
அடுத்து முந்திரியை சிறிது நெய் ஊற்றி வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றிரண்டாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், மிளகு சேர்த்த தாளித்து, பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும். 
 
பின்பு அத்துடன் மசித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் அதில் முந்திரியை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், வெண் பொங்கல் ரெடி!!! இதனை சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்