Metz நகரில் பதட்டம் துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயம், ஒருவர் கைது.

24 புரட்டாசி 2023 ஞாயிறு 12:00 | பார்வைகள் : 13139
Metz நகரில் இடம்பெற்ற ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவமவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என Metz அரச வழக்கறிஞர் Yves Badorc தெரிவித்துள்ளார்.
Metz நகரின் avenue de Thionville வீதியில் நடந்த சம்பவத்தில் 1989, 1992 மற்றும் 2002ம் ஆண்டுகளில் பிறந்த மூவரே படுகாயம் அடைந்த நிலையில் அங்குள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 1984ம் ஆண்டில் பிறந்த ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் அரச வழக்கறிஞர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. "இது ஒரு படுகொலை முயற்சி" எனும் நோக்கிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அரச வழக்கறிஞர் Yves Badorc தெரிவித்துள்ளார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025