Beyfortus என்னு குழந்தைகளுக்கான மருந்து பெரும் தட்டுப்பாடு
27 புரட்டாசி 2023 புதன் 09:40 | பார்வைகள் : 5389
பிறந்த சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு குழாய் அழற்சி நோய்க்கான 'Beyfortus' எனும் தடுப்பூசி மருந்துக்கு பிரான்சில் பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன.
'laboratoire Sanofi' ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் 200.000 தடுப்பூசிகள் அனைத்தையும் அரசாங்கம் வாங்கியுள்ளது அவை மருத்துவமனையில் மகப்பேறு பகுதியில் உள்ள சிறு குழந்தைகளுக்கு பாவிப்பதற்காக அரசாங்கம் அதனை செய்துள்ளது. இதனால் வெளியே உள்ள மருந்தகங்களில் 'Beyfortus' தடுப்பூசிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என தெரியவருகிறது.
பிறந்து இரண்டு வாரங்கள் ஆன ஐந்து கிலோ எடைக்கு குறைவான குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய குறித்த தடுப்பூசிக்காக தாங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தும் தமக்கு இதுவரை வந்து சேரவில்லை என தெரிவித்துள்ள மருந்தகங்கள், மருந்துச் சீட்டோடு வரும் தாய்மார்களை வெறும் கையோடு திருப்பி அனுப்பும் நிலை தொடர்வதாக தெரிவித்துள்ளனர்.