Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் டெங்கு பரவல்.... அதிகரிக்கும் நோயாளிகள்....

பாகிஸ்தானில் டெங்கு பரவல்.... அதிகரிக்கும் நோயாளிகள்....

28 புரட்டாசி 2023 வியாழன் 06:42 | பார்வைகள் : 3112


பாகிஸ்தானில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் முக்கிய நகரங்களான ராவல்பிண்டி, முல்தான், பைசாலாபாத், குஜ்ரன்வாலாவில் டெங்கு பாதிப்பு நோயாளிகள் அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

லாகூரில் மட்டும் இந்தாண்டு இதுவரை 1,511 பேர் டெங்கு நோயாளிகள் பாதிப்புக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

பாகிஸ்தானில் 27.9.2023 இல் மட்டும் புதிதாக 159 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இந்தாண்டு 3 ஆயிரத்து 849 ஆக உயர்ந்துள்ளது.

அத்தோடு நேற்று காலை நிலவரப்படி 151 பேர் டெங்கு மீட்பு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக ராவல்பிண்டியில் உள்ள அரசு வைத்தியசாலையில் 70 பேர் சிகிச்சை பெறுகிறார்கள்.

பலர் நோயின் தாக்கத்தை கருத்தில் கொள்ளாமல் வீடுகளிலிருந்து கொண்டு சிகிச்சை பெறுவதாகவும் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்