இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - வெளியான வர்த்தமானி
30 புரட்டாசி 2023 சனி 11:04 | பார்வைகள் : 3388
நாட்டில் ஒரு முறை மற்றும் குறுகிய காலங்களுக்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த வர்த்தமானி அறிவித்தலை மீறி செயற்படும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சுற்றாடல் அதிகாரச் சபையின் தலைவர் சுபுன்.எஸ்.பத்திரகே தெரிவித்துள்ளார்.
குறித்த நடவடிக்கை அமுல்ப்படுத்தப்பட்டதன் பின்னர், நாளை முதல் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.