கால்பந்து ஜாம்பவான் Samuel Eto மீது வழக்கு விசாரணை
29 புரட்டாசி 2023 வெள்ளி 08:52 | பார்வைகள் : 3081
முன்னாள் செல்சியா அணி நட்சத்திர வீரரும் கால்பந்து உலகின் ஜாம்பவான்களில் ஒருவருமான Samuel Eto விசாரணையில் சிக்கியுள்ளார்.
கேமரூன் கால்பந்து கழகத்தின் தலைவராக 2021 டிசம்பர் மாதம் முதல் செயல்பட்டு வருபவர் சாமுவேல் எட்டோ. தற்போது மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் இரண்டாவது வரிசை அணிகளின் பல கால்பந்து ஆட்டங்களின் வெற்றி தோல்வியை இவர் முடிவு செய்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை மாதம் Victoria United அணி தலைவருடன் சாமுவேல் எட்டோ அலைபேசியில் விவாதிக்கும் பதிவு ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் அவர் Victoria United அணியின் வெற்றிக்கு உதவுவதாக உறுதி அளிக்கிறார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் வெறும் கற்பனை என எட்டோ புறந்தள்ளியிருந்தார். இந்த நிலையில் தான் கேமரூன் கால்பந்து கழகத்தில் ஊழல் தொடர்பில் 40 பேர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறி பொலிசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
செல்சியா அணியில் ஒரே ஒரு பருவத்தில் மட்டும் விளையாடியிருந்த எட்டோ, மொத்தம் 12 கோல்களை பதிவு செய்திருந்தார்.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் பதிவு செய்திருந்தார்.
2014 மற்றும் 2015ல் Everton அணியில் இணைந்து களமிறங்கிய எட்டோ, செல்சியா அணிக்கு எதிராக தமது முதல் கோல் பதிவு செய்தாலும், Everton அணி 6-3 என தோல்வியை தழுவியது.