Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : கர்ப்பிணி பெண்ணை மகிழுந்தால் மோதித்தள்ளியவர் கைது!

பரிஸ் : கர்ப்பிணி பெண்ணை மகிழுந்தால் மோதித்தள்ளியவர் கைது!

29 புரட்டாசி 2023 வெள்ளி 16:27 | பார்வைகள் : 3902


கர்ப்பிணி பெண் ஒருவரை மகிழுந்தினால் மோதித்தள்ளிய ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

மாலை 7 மணி அளவில் வீதியில் நடந்து சென்ற கர்ப்பிணி பெண் ஒருவரை மகிழுந்தில் பயணித்த நபர் ஒருவர் இடித்து தள்ளியுள்ளார். இச்சம்பவத்தை பார்வையிட்ட பாதசாரிகள் சிலர் உடனடியாக மருத்துவக்குழுவினரை அழைத்துள்ளனர். கர்ப்பிணி பெண் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மகிழுந்தினார் மோதித்தள்ளியவர் 7.15 மணி அளவில் rue des Poissonniers வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை எனவும், அவரது மகிழுந்து காப்புறுதி செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவம் விபத்து இல்லை எனவும், வேண்டுமென்றே மகிழுந்தினால் அவர் மோதியுள்ளார் எனவும், அப்பெண் குறித்த நபரின் முன்னாள் கணவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்