Paris 24 ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க அனுமதி.
29 புரட்டாசி 2023 வெள்ளி 16:53 | பார்வைகள் : 6149
அடுத்து ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் ஏற்பாடுகள் மிகப் பெரும் பிரமாண்டமான முறையில் நடந்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான "paralympique" ஒலிம்பிக் போட்டிகள் என இரு பிரிவுகளில் பங்குபற்ற உலகம் முழுவதும் உள்ள நாடுகளின், வீர, வீராங்கனைகள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் எந்தெந்த நாடுகளின் வீரர்களை Paris 24 போட்டிகளில் அனுமதிப்பது என்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனமும், தங்கள் நாட்டின் வீரர்களை Paris 24 போட்டிகளுக்கு அனுப்புவதா என அந்தந்த நாடுகள் முடிவெடுத்து வருகின்றன.
அந்த வரிசையில், ரஷ்யா, உக்ரைன் போரின் பின்னர் ரஷ்யா பொருளாதார தடை உட்பட உலகநாடுகளின் பல தடைகளைச் சந்தித்துள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான paralympique ஒலிம்பிக்கிக் போட்டிகளில் ரஷ்யா பங்குபற்றும் என ஒலிம்பிக் சம்மேளனமும், ரஷ்யாவும் இன்று சம்மதம் தெரிவித்துள்ளன.