பிரான்சில் செல்லுபடியற்றுப் போகிறது இளம் சிவப்பு வாகன ஒட்டுநர் உரிமம்.
2 ஐப்பசி 2023 திங்கள் 17:36 | பார்வைகள் : 6545
பிரான்சில் 2013 ஜனவரி 19ம் திகதிக்கு முன் வரை மூன்று மடிப்புக்களைக் கொண்ட இளம் சிவப்பு நிறத்திலான வாகன ஓட்டுநர் உரிமம் நடைமுறையில் இருந்துவந்தது. குறித்த திகதிக்குப் பின்னர் வங்கி அட்டைகள் போன்ற அமைப்பில் புதிய தொழில்நுட்பத்தை கொண்ட வாகன ஓட்டுநர் உரிமம் நடைமுறைக்கு வந்தது.
பழைய தடித்த காகிதத்திலான வாகன ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு படிப்படியாக புதிய அட்டைகள் அனுப்பிவைக்கப்படும், அவசரப்பட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இளம் சிவப்பு நிறத்திலான வாகன ஓட்டுநர் உரிமம் எந்த காலகட்டத்தில் முற்றுமுழுதுமாக செல்லுபடியற்றுப் போகிறது எனும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ம் திகதி ஜனவரி மாதம் 2033 ஆண்டுக்கு பின்னர் பழைய ஓட்டுநர் உரிமம் செல்லுபடியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் பத்து ஆண்டுகளுக்குள் புதிய உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் இல்லையேல் 11 eurosவில் இருந்து 38 euros வரை 2033க்குப் பின்னர் தண்டப் பணம் அறவிடப்படும். குறித்த நாட்களுக்குள் புதிய உரிமத்தை காவல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லாவிடில் 135 euros வரை தண்டப்பணம் செலுத்த நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.